/உள்ளூர் செய்திகள்/சேலம்/அறுவடை முடிந்த 'மா' கவாத்துக்கு ஏற்ற காலம்அறுவடை முடிந்த 'மா' கவாத்துக்கு ஏற்ற காலம்
அறுவடை முடிந்த 'மா' கவாத்துக்கு ஏற்ற காலம்
அறுவடை முடிந்த 'மா' கவாத்துக்கு ஏற்ற காலம்
அறுவடை முடிந்த 'மா' கவாத்துக்கு ஏற்ற காலம்
ADDED : ஜூலை 27, 2024 01:15 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், 15,000 ஏக்கரில் பல்வேறு வகை, 'மா' மரங்கள் நடவு செய்யப்பட்டு அதன் அறுவடை நடந்து வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறி-யதாவது: ஜூலை இறுதி, ஆகஸ்ட் முதல் வாரம், மா மரங்களை கவாத்து செய்வதற்கு ஏற்ற காலம். மா அறுவடை செய்த நுனி கிளை, காய்ந்த கிளை, அடர்த்தியாக உள்ள களைகளை அகற்றி, சூரிய ஒளி, காற்றோட்டம், மரத்தின் உட்பகுதிக்கு செல்லும்படி செய்ய வேண்டும். மர கிளைகள் மண்ணில் தொடாதபடி தரையில் இருந்து, 3 அடி உயரத்துக்கு மேல் துண்டித்து, கவாத்து செய்ய வேண்டும். ஆகஸ்டில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த, வேம்பு எண்ணெய், காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து தெளிக்க வேண்டும். செப்டம்பர் - அக்டோபரில், ஒரு மரத்துக்கு மட்கிய தொழு உரம் தலா, 50 கிலோ வீதம் மற்றும் உயிர் உரங்கள் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த மகசூல் அதிகளவில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.