/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' கூட்டம்: ஆலோசனை வழங்கிய மா.செ.,அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' கூட்டம்: ஆலோசனை வழங்கிய மா.செ.,
அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' கூட்டம்: ஆலோசனை வழங்கிய மா.செ.,
அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' கூட்டம்: ஆலோசனை வழங்கிய மா.செ.,
அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' கூட்டம்: ஆலோசனை வழங்கிய மா.செ.,
ADDED : ஜன 31, 2024 03:23 PM
ஓமலுார் : லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அ.தி.மு.க., 'ஐ.டி., விங்' நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பிப்., 4ல் ஓமலுாரில் நடக்க உள்ளது.
அதில் பொதுச்செயலர் பழனிசாமி, பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஐ.டி., விங் கூட்டம், பெண்ணை தாக்கி கொடுமைப்படுத்திய தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகளை கண்டித்து ஆத்துாரில் நடக்க உள்ள ஆர்ப்பாட்டம், கட்சி சார்பில் நடக்க உள்ள தெருமுனை பிரசாரம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர் அசோகன், கோவிந்தராஜ், சித்தேஸ்வரன், சுப்ரமணியம், தாரமங்கலம் மணிமுத்து, ஐ.டி., விங் மாவட்ட செயலர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.