/உள்ளூர் செய்திகள்/சேலம்/துணைவேந்தர் மீது நடவடிக்கை பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம்துணைவேந்தர் மீது நடவடிக்கை பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம்
துணைவேந்தர் மீது நடவடிக்கை பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம்
துணைவேந்தர் மீது நடவடிக்கை பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம்
துணைவேந்தர் மீது நடவடிக்கை பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம்
ADDED : ஜன 11, 2024 11:00 AM
ஓமலுார்: சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை முன், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், வாயில் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு பல்கலை பேராசிரியர் சங்க மாநில செயலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது: துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். பதிவாளராக இருந்தவர் தலைமறைவாக உள்ளார். தரமற்ற முறையில் பல்கலை நிர்வாகம் செயல்படுகிறது. துணைவேந்தர், பதிவாளர்(பொ), இவர்களுக்கு உடந்தையாக இருந்த நிர்வாக ஊழியர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இந்நிலையில் கவர்னர், இந்த பல்கலைக்கு வருவது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் கவர்னர் வருகை புரிவது இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்டல தலைவர் தென்னரசு, துணைத்தலைவர் ரவி உள்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.