/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்து சிறப்பு காப்பீடு: அஞ்சலகம் அழைப்பு விபத்து சிறப்பு காப்பீடு: அஞ்சலகம் அழைப்பு
விபத்து சிறப்பு காப்பீடு: அஞ்சலகம் அழைப்பு
விபத்து சிறப்பு காப்பீடு: அஞ்சலகம் அழைப்பு
விபத்து சிறப்பு காப்பீடு: அஞ்சலகம் அழைப்பு
ADDED : ஜூன் 14, 2025 06:41 AM
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இணைந்து, கடந்த, 10 முதல், வரும், 30ம் வரை, விபத்து சிறப்பு காப்பீடு பதிவு கடைப்-பிடிக்கிறது. மக்கள், பொது நிறுவனங்கள், அமைப்புகள் குறிப்பி-டப்பட்டுள்ள காலத்துக்குள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெ-றலாம்.
பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்-படும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு வெறும், 350 ரூபாய், 559 ரூபாய், 799 ரூபாய் பிரீமியம் முறையே, 5, 10, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் விபத்து காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்-ளது. 18 முதல், 65 வயதுக்கு உட்பட்டவர், இத்திட்டத்தில் இணையலாம்.இதற்கு ஆதார், மொபைல் எண், வாரிசுதாரரின்(நாமினி) விபரம் தேவை. சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல-கங்களிலும், இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, அனைத்து அஞ்சலகத்தையும் அணுகலாம். தவிர, 0427 - 2261656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.