ADDED : ஜூன் 11, 2025 02:16 AM
கெங்கவல்லி, பவுர்ணமியை ஒட்டி, தம்மம்பட்டி மக்கள் சார்பில், அங்குள்ள சிவன் கோவில் படித்துறையில்,
சுவேத நதி ஆரத்தி பூஜை நேற்று இரவு நடந்தது. பவுர்ணமி நிலவுக்கும், நிலவு ஒளியில் சுவேத நதிக்கும் பூஜை செய்து பூக்கள் துாவி வழிபட்டனர்.
திரளானோர் பங்கேற்றனர். இந்த பூஜையை தொடர்ந்து செய்வதால், ஊரின் நீராதாரம் வற்றாத நிலையில் இருக்கும் என, மக்கள் தெரிவித்தனர்.