/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
ADDED : செப் 23, 2025 01:56 AM
சேலம், சேலம் சித்தனுார் இரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிவரதன், 20, கூலி தொழிலாளி. இவரது நண்பர் பாலாஜி. இருவரும் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சூரமங்கலத்திலிருந்து லீ பஜார் நோக்கி சென்றுள்ளனர்.
மூன்று ரோடு அருகில், பால்டேங்கர் லாரி பழுதாகி நின்றிருந்தது. பல்சர் பைக்கை ஓட்டி வந்த ஹரிவரதன், எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியுள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்த ஹரிவரதன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடன் வந்த பாலாஜி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று காலை, ஹரிவரதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.