/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக்கில் சென்ற வாலிபர் மொபட் மீது மோதி பலி பைக்கில் சென்ற வாலிபர் மொபட் மீது மோதி பலி
பைக்கில் சென்ற வாலிபர் மொபட் மீது மோதி பலி
பைக்கில் சென்ற வாலிபர் மொபட் மீது மோதி பலி
பைக்கில் சென்ற வாலிபர் மொபட் மீது மோதி பலி
ADDED : செப் 23, 2025 01:33 AM
மேட்டூர், :பைக்கில் சென்ற வாலிபர், மொபட் மீது மோதி பலியானார்.
ஓமலுார், பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்த அர்த்தனாரி மகன் அருண்பிரசாத், 24. டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ள இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு பச்சனம்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு புதிதாக வாங்கிய பஜாஜ் சிடி 110 பைக்குக்கு, ஸ்டிக்கர் ஒட்டி விட்டு வருவதாக கூறி ெஹல்மெட் அணியாமல், பச்சனம்பட்டியில் இருந்து நேற்று மதியம் மேச்சேரி சென்றுள்ளார். மதியம், 2:30 மணியளவில் ஓமலுார்-மேச்சேரி நெடுஞ்சாலையில் சின்னசாத்தப்பாடி அருகே சென்றுள்ளார். அதே பகுதியில் நங்கவள்ளி, மலையடிப்பட்டி பெருமாள், 50, என்பவர் தன் மனைவி அமுதாவுடன் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். அப்போது சிக்னல் எதுவும் கொடுக்காமல், பெருமாள் திடீரென தனது மொபட்டை திருப்பியுள்ளார். அந்த வழியாக சென்ற அருண்பிரசாத் பைக்கை நிறுத்த முடியாமல், மொபட் மீது மோதி கீழே விழுந்து படுகாயங்களுடன் பலியானார்.
மொபட்டில் இருந்து கீழே விழுந்த அமுதாவுக்கு காயம் ஏற்பட்டது. அருண்பிரசாத் உடல் பரிசோதனைக்காக ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.