/உள்ளூர் செய்திகள்/சேலம்/காங்குடையான் கோவில் திருவிழாவில் வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒரு தரப்பு கோரிக்கைகாங்குடையான் கோவில் திருவிழாவில் வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒரு தரப்பு கோரிக்கை
காங்குடையான் கோவில் திருவிழாவில் வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒரு தரப்பு கோரிக்கை
காங்குடையான் கோவில் திருவிழாவில் வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒரு தரப்பு கோரிக்கை
காங்குடையான் கோவில் திருவிழாவில் வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒரு தரப்பு கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2024 01:24 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரில் கைலாச-நாதர், அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன், காங்-குடையான் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
இந்து சமய அறநி-லையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 2004ல் நடந்த தேர் திருவிழாவின்போது இரு தரப்பினர் இடையே தக-ராறு ஏற்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின், அனைத்து பிரிவினர் சேர்ந்து திருவிழா நடத்த முன்வந்தனர். அதன்படி கடந்த, ௨௪ல் தேர் திருவிழா நடந்தது. அதற்கு முன்ன-தாக, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலரை போலீசார் தாக்கியதால், பதற்றம் உருவானது. ஒரு வழியாக போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தனர்.இதையடுத்து ஒவ்வொரு பிரிவினரும் அருங்காட்டம்மன் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளனர். இதில் வரும் 30ல் ஒரு தரப்பினர் வழிபட உள்ளதால், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமா-ரிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.அதில், 'நீதிமன்ற உத்தரவுக்கு பின் அனைத்து பிரிவு மக்களும் பேச்சு நடத்தி, கடந்த, 22ல் முதல்முறை கோவிலுக்கு சென்று வழிபட்டோம். சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வரும், 30ல் காங்குடையான் கோவில் திருவிழா நடக்கிறது. அதற்கு செல்லும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்-ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.