/உள்ளூர் செய்திகள்/சேலம்/சாலையோர கடைக்குள் புகுந்த பஸ்; பெண் காயம்சாலையோர கடைக்குள் புகுந்த பஸ்; பெண் காயம்
சாலையோர கடைக்குள் புகுந்த பஸ்; பெண் காயம்
சாலையோர கடைக்குள் புகுந்த பஸ்; பெண் காயம்
சாலையோர கடைக்குள் புகுந்த பஸ்; பெண் காயம்
ADDED : ஜூன் 25, 2024 01:57 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, மயிலம்பட்டியில் தாறுமாறாக சென்ற அரசு டவுன் பஸ் கடைக்குள் புகுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
இடைப்பாடியில் இருந்து, குமாரபாளையத்திற்கு அரசு டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது. சித்துாரை சேர்ந்த பிரபாகரன், 57, ஓட்டி சென்றார். குமாரபாளையம் சென்ற பஸ், இடைப்பாடிக்கு திரும்பி வந்துள்ளது. அதில், 25 பயணிகள் இருந்தனர். காலை, 9:00 மணிக்கு இடைப்பாடி அருகே மயிலம்பட்டி பகுதி அருகே வந்தபோது, நெடுஞ்சாலையோரம் உள்ள வடிவேல் என்பவரின் மீன் கடை, தமிழ்செல்விக்கு சொந்தமான இட்லி கடைக்குள் டவுன் பஸ் புகுந்தது. மேலும் கடை முன்புறம் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இதில் பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பயணிகள் அலறியடித்து இறங்கினர். இந்த விபத்தில் இட்லி கடையில் இருந்த பொருட்கள் சேதமானது. மேலும் தமிழ்செல்வி, 58, லேசான காயமடைந்தார்.
தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.