ADDED : ஜன 24, 2024 11:34 PM
சேலம்:சேலம், சூரமங்கலம், நெடுஞ்சாலை நகரில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கடந்த, 21 காலை, 7:30 மணிக்கு கோவில் கும்பாபிேஷம் நடந்தது.
இதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால், கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விழாவில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி சகுந்தலா, 72, என்பவர் அணிந்திருந்த, 9.2 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.