/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேலும் 8 ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படும் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்மேலும் 8 ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படும் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
மேலும் 8 ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படும் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
மேலும் 8 ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படும் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
மேலும் 8 ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படும் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
ADDED : பிப் 25, 2024 03:57 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும், 'அம்ரித் பாரத்' திட்ட பணிகளை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
'அம்ரித் பாரத்' திட்டத்தில், ஸ்டேஷன்களில் மின்துாக்கி, நடைபாதை விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் ஜங்ஷனில் முகப்பு மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட, 15 ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில், 271 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பிப்., 26ல்(நாளை) பிரதமர் மோடி, 2,000க்கும் மேற்பட்ட ஸ்டேஷன்களில், நடந்து முடிந்த பல்வேறு பணிகளை திறந்து வைத்தும், புது பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். சேலம் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட, 21 சுரங்கப்பாதைகள் திறந்து வைக்கப்பட உள்ளன. 11 சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றன.
திருப்பத்துார், மொரப்பூர், ஈரோடு, வடகோவை, மேட்டுபாளையம், நாமக்கல், சின்னசேலம் என, 8 ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில், மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளன. பிரதமர் தொடங்கி வைக்கப்படும் நிகழ்ச்சி, சேலம் ரயில்வே கோட்டத்தில், 40 இடங்களில் நேரலை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.