/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்
ADDED : பிப் 06, 2024 03:06 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வடசென்னிமலை வழியாக சேலம் - விருத்தாசலம் ரயில் பாதை செல்கிறது. இதில், வடசென்னிமலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மேம்பாலம் அமைக்க கோரி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ஆத்துார் பயணியர் மாளிகை முன், சுரங்கப்பாதை எதிர்ப்பு குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் காட்டுக்கோட்டை, வடசென்னிமலை, சார்வாய்புதுார், சதாசிவபுரம், சாத்தப்பாடி, ஒதியத்துார், வளையமாதேவி, புனல்வாசல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, காட்டுக்கோட்டை, வடசென்னிமலை பகுதியில், 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
இதுகுறித்து, சுரங்கப்பாதை எதிர்ப்பு குழு நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணன் கூறியதாவது:
வடசென்னிமலை ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாதை அமைத்தால் கரும்பு, மஞ்சள், பருத்தி போன்ற விளை பொருட்களை லாரிகளில் எடுத்துச் செல்ல முடியாது.
மழைநீர் தேங்கும் பகுதியாக உள்ளதால், சுரங்கப்பாதையை தவிர்த்து, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.