/உள்ளூர் செய்திகள்/சேலம்/600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
ADDED : ஜூலை 09, 2024 06:20 AM
பனமரத்துப்பட்டி : சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், நேற்று மதியம், 1:00 மணியளவில் மல்லுார் அம்மாபாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பூவாயியம்மன் கோவில் அருகே பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை, மினி பயணிகள் வேனில் ஏற்றுவதை கண்கூடாக பார்த்து சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அதில், 12 மூட்டையில் தலா, 50 கிலோ வீதம் மொத்தம், 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறிந்து வேனுடன் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கந்தன் மகன் ரமேஷ், 31, என்பவருக்கு வேன் சொந்தமானது என தெரிந்தது. அம்மாபாளையம், மல்லுார் பகுதிகளில் ரேஷன்கடை, மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஒன்றரை மாதமாக கோழிப்பண்ணைகளுக்கு விற்பதாக ஒப்புக்கொண்ட ரமேைஷ போலீசார் கைது செய்தனர்.