Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாவட்டத்தில் 326 மி.மீ., மழை

சேலம் மாவட்டத்தில் 326 மி.மீ., மழை

சேலம் மாவட்டத்தில் 326 மி.மீ., மழை

சேலம் மாவட்டத்தில் 326 மி.மீ., மழை

ADDED : ஜூன் 04, 2024 03:54 AM


Google News
சேலம்: சேலம் மாவட்டத்தில், 326 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த, இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 5:30 மணியளவில் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு, சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல த்த மழை பெய்ய தொடங்கியது.

சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சிலர் குடையை பிடித்து சென்றனர். சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. கலெக்டர் அலுவலம், புது பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுரி சாலை, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையில் தேங்கிய நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. வேலை முடிந்து வீடுகளுக்கு செல்பவர்கள் அலுவலகங்களிலேயே தஞ்சம் அடைந்தனர். மழை சற்று குறைந்த பின் அவர்கள் பஸ், வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, 6:00 முதல் நேற்று காலை, 6:00 வரை பெய்த மழை நிலவரம்: சேலம், 17.7 மி.மீ., ஏற்காடு, 7.6, வாழப்பாடி, 9.4, அணைமடுவு, 6, ஆத்துார், 48, கெங்கவல்லி, 59, தம்மம்பட்டி, 18, ஏத்தாப்பூர், 5, கரியகோவில், 72, வீரகனுார், 36, நந்தகரை, 21, சங்ககிரி, 7.3, இடைப்பாடி, 7.4, மேட்டூர், 2.8, ஓமலுார், 4.4, டேனீஷ்பேட்டை, 4.4 என மொத்தம், 326 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

* நேற்று இரவு, 8:00 முதல் 8:30 மணி வரை அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. தொடர் மழை காரணமாக வாழப்பாடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

* ஏற்காட்டில் நேற்று மாலை, 6:10 மணிக்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இரவு, 8:30 மணி வரை கொட்டி தீர்த்தது. மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us