/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது 3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : மார் 21, 2025 01:43 AM
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
சேலம்:சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம், பூலாவரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 மூட்டைகளில், 1,900 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், வேன் டிரைவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜா, 34, உடன் வந்தவர், சேலம், தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வமணி, 38, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், வேனுடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், 3வது நடைமேடையில், 2 பேர் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இருப்பதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீசார் விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த லட்சுமி, 56, பிரகாஷ், 35, என்பதும், சங்ககிரியில் இருந்து, 1,300 கிலோ ரேஷன் அரிசியை ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றதம் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1,300 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.