/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு 31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு
31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு
31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு
31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு
ADDED : அக் 19, 2025 02:34 AM
சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க, சேலம் சரகத்தில், 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொப்பூர், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரை வரை நடந்த சோதனையில், 31 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, 50,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10,000 ரூபாய் உடனே வசூலிக்-கப்பட்டது. மேலும், 89,210 ரூபாய் சாலை வரி வசூலானதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


