/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வலுதுாக்கும் போட்டியில் 300 மாணவர் பங்கேற்பு வலுதுாக்கும் போட்டியில் 300 மாணவர் பங்கேற்பு
வலுதுாக்கும் போட்டியில் 300 மாணவர் பங்கேற்பு
வலுதுாக்கும் போட்டியில் 300 மாணவர் பங்கேற்பு
வலுதுாக்கும் போட்டியில் 300 மாணவர் பங்கேற்பு
ADDED : செப் 15, 2025 12:56 AM
சேலம்:சேலம் கிழக்கு மாவட்ட வலுதுாக்கும் சங்கம், தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலையம் இணைந்து, மாவட்ட அளவில், கிளாசிக் வலுதுாக்கும் போட்டி, பொன்னம்மாபேட்டையில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று நடந்தது.
சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில், 50 முதல், 120 கிலோ வரையிலான எடை பிரிவுகளில் நடந்த போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் வரும், 26 முதல், 28 வரை கோவையில் நடக்க உள்ள போட்டிக்கு தகுதி பெற்றனர்.சங்க தலைவர் சங்கர், செயலர் பொன்சடையன் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.