/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு 3 ஆண்டு சிறைபெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜன 06, 2024 07:01 AM
ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார், வடக்கு உடையார்பாளையத்தை சேர்ந்த முருகன் மனைவி ஜீவா, 40.
அதே பகுதியில், டெய்லர் கடை வைத்துள்ளார். இவர், 2021 செப்., 29 இரவு, 7:00 மணிக்கு கடைக்கு நடந்து வந்தபோது, பைக்கில் வந்த வாலிபர், அவரது கண்ணில் மிளகாய் பொடியை துாவினார். தொடர்ந்து ஜீவாவை தாக்கி, அவர் அணிந்திருந்த, 3.5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றார். இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரணையில் ஆத்துார், ஜோதி நகரை சேர்ந்த மனோஜ்குமார், 27, நகை பறித்தது தெரிந்ததால், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, ஆத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மனோஜ்குமாருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஆனந்தன் நேற்று உத்தரவிட்டார்.