Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

ADDED : மார் 24, 2025 07:00 AM


Google News
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துாரை சேர்ந்த, விவசாயி பெரியதம்பி, 45. இவர் வளர்க்கும், 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் இறந்த நிலையில், 5 ஆடுகள் படுகாயங்களுடன் காணப்பட்டன. நங்கவள்ளி கால்நடைத்துறை மருத்துவர் பார்வையிட்டார். வனத்துறை அதிகாரிகள், நாய் கடித்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us