/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
பைக் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : செப் 23, 2025 01:57 AM
ஓமலுார், பைக் திருட்டு வழக்கில், கரூப்பூரை சேர்ந்த சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஓமலுார் பஜார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 26. இவர், தீவட்டிப்பட்டி ஸ்டேட் வங்கி யில் வேலை செய்கிறார்.
கடந்த, 18ல் தனது வீட்டு முன் யமஹா எம்.டி.1 பைக்கை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஓமலுார் போலீசார், கருப்பூர் மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த தினேஷ்குமார், 19, மோகன்ராஜ், 19. மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய மூவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.