/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊழல் நடப்பதை தடுக்க ஊராட்சியில் 3 பேர் குழுஊழல் நடப்பதை தடுக்க ஊராட்சியில் 3 பேர் குழு
ஊழல் நடப்பதை தடுக்க ஊராட்சியில் 3 பேர் குழு
ஊழல் நடப்பதை தடுக்க ஊராட்சியில் 3 பேர் குழு
ஊழல் நடப்பதை தடுக்க ஊராட்சியில் 3 பேர் குழு
ADDED : ஜூலை 27, 2024 12:35 AM
சேலம்: தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில், 25 லட்சம் ரூபாய் வரையான ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் அலுவலர்களாக, மண்-டல துணை பி.டி.ஓ., பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் அடங்கிய குழுவுக்கு அதிகாரம் அளித்து, அரசு உத்தரவிட்டுள்-ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது: ஒப்பந்த நடைமுறையில் முதல்முறை, 3 பேர் குழு அமைத்தது வரவேற்கத்தக்கது. இதேபோல் இன்னும் நிறைய மாற்றங்களை கொண்டுவந்து ஊராட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஊராட்சி தலைவர்களின் பணிப்பளு குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருதலைபட்சமாக ஒப்பந்தம் விடுவது, ஒப்பந்தத்தில் முறைகேடு நடப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.