/உள்ளூர் செய்திகள்/சேலம்/2ம் முறை அமைதி பேச்சு தோல்வி; எருதாட்டம் நடத்துவதில் சிக்கல்2ம் முறை அமைதி பேச்சு தோல்வி; எருதாட்டம் நடத்துவதில் சிக்கல்
2ம் முறை அமைதி பேச்சு தோல்வி; எருதாட்டம் நடத்துவதில் சிக்கல்
2ம் முறை அமைதி பேச்சு தோல்வி; எருதாட்டம் நடத்துவதில் சிக்கல்
2ம் முறை அமைதி பேச்சு தோல்வி; எருதாட்டம் நடத்துவதில் சிக்கல்
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
வீரபாண்டி: சேலம், கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி மூங்கில்-குத்து முனியப்பன் கோவிலில் ஆடி முதல் வியாழனில் திருவிழா நடத்தப்படும்.
அதை முன்னிட்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலில் எருதாட்டம் நடத்தப்படும். அதற்கு முந்தைய நாளே, ஒவ்வொரு குழுவினரும்(கோர்வை), சில காளைகளை அழைத்துக்கொண்டு எருதாட்ட திடலுக்கு வருவர். அதன்படி, 15க்கும் மேற்பட்ட கோர்வையினர் உள்ளனர். இந்நிலையில் வரும், 18ல் திருவிழா நடக்க உள்ளது. இதில் ஒரு கோர்வையை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், அந்த கோர்வையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி உள்ளனர். இதுதொ-டர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு அளித்த புகாரையடுத்து, சேலம் தெற்கு தாசில்தார் அலுவல-கத்தில் கடந்த ஜூன், 22ல் அமைதி பேச்சு நடந்தது. அதில் உடன்-பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம், 2ம் முறை, தெற்கு தாசில்தார் செல்வராஜ் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி, கொண்டலாம்பட்டி போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சு நடந்தது. அதிலும் இரு தரப்பிலும் சமரசம் ஏற்ப-டாததால் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால் எருதாட்டம் நடப்பதில் சிக்கல் நிலவுகிறது.