/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆத்துாரில் ஜோதிடர் வீட்டில் 28 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டுஆத்துாரில் ஜோதிடர் வீட்டில் 28 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
ஆத்துாரில் ஜோதிடர் வீட்டில் 28 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
ஆத்துாரில் ஜோதிடர் வீட்டில் 28 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
ஆத்துாரில் ஜோதிடர் வீட்டில் 28 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 08, 2024 02:48 AM
ஆத்துார்: ஆத்துாரில், ஜோதிடர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 28 பவுன் மற்றும் 3.50 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரம், விநாயகபுரம் ஜே.கே., நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமோகன், 43. இவர் ஜோதிடம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வக்கீல் ராமசாமி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த, 1ல், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தும்பலில் உள்ள சின்ன மாமனார் சுப்ரமணி வீட்டிற்கு, கோவில் பண்டிகை நிகழ்ச்சிக்கு, ஜோதிடர் தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். நேற்று, வீட்டின் உரிமையாளர் ராமசாமி, வீடு திறந்து இருப்பது குறித்து கிருஷ்ணமோகனுக்கு தகவல் கொடுத்தார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வெளிப்புற கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பீரோவில் இருந்த, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 28 பவுன் நகை மற்றும் 3.50 லட்சம் ரூபாய் திருட்டுபோனது தெரியவந்தது. ஜோதிடர் கிருஷ்ணமோகன் அளித்த புகார்படி, டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். ஆத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அமாவாசை நாளில் திருட்டு
அமாவாசை நாளில், 'பிளாக் நைட்' என, கூடுதல் போலீசார் ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, சேலம் எஸ்.பி., அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம், ஆத்துார் சப்-டிவிசனில் இன்ஸ்பெக்டர்கள் ஆத்துார் டவுன் செந்தில்குமார், வீரகனுார் சாவித்திரி ஆகியோர், இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அமாவாசை நாளான அன்று இரவு, மழை பெய்து கொண்டிருந்தபோது, ஆள் இல்லாத வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, பணம், நகை திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.