/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
ADDED : ஜூன் 16, 2025 03:14 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம், 4 அலகுகளில் தலா, 12.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 50 மெகாவாட் அணை மின் நிலையம்; ஒரு அலகில் தலா, 50 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 200 மெகாவாட் சுரங்க மின் உற்பத்தி நிலையம் உள்ளன. தவிர அணை அடிவாரம் முதல் கரூர் வரை, 10 கி.மீ.,க்கு, 1 வீதம், 7 இடங்களில் காவிரி குறுக்கே தலா, 30 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கதவணை மின் நிலையங்கள் உள்ளன.
இதில் அணை, சுரங்க மின் நிலையங்களில் முழுமையாக, 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, 23,500 முதல், 25,000 கனஅடி நீர், கதவணை மின் நிலையங்களில், முழு மின் உற்பத்திக்கு, 20,000 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்ற வேண்டும்.
வினாடிக்கு, 6,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, நேற்று காலை, 10:00 மணி முதல், 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணை, சுரங்க மின் நிலையங்களில், 100 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில் தலா, 20 முதல், 21 மெகாவாட் என, 240 முதல், 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.