/உள்ளூர் செய்திகள்/சேலம்/2.45 டன் புகையிலை பொருள் பறிமுதல் டோல்கேட்டில் லாரியுடன் டிரைவர் கைது2.45 டன் புகையிலை பொருள் பறிமுதல் டோல்கேட்டில் லாரியுடன் டிரைவர் கைது
2.45 டன் புகையிலை பொருள் பறிமுதல் டோல்கேட்டில் லாரியுடன் டிரைவர் கைது
2.45 டன் புகையிலை பொருள் பறிமுதல் டோல்கேட்டில் லாரியுடன் டிரைவர் கைது
2.45 டன் புகையிலை பொருள் பறிமுதல் டோல்கேட்டில் லாரியுடன் டிரைவர் கைது
ADDED : ஜன 06, 2024 07:00 AM
சேலம் : சேலத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.45 டன் புகையிலை பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரை கைது செய்தனர்.
மேலும், பெங்களூருவை சேர்ந்த, 'பார்சல்' நிறுவன உரிமையாளரை தேடுகின்றனர்.பெங்களூருவில் இருந்து சேலம் வழியே லாரியில், புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, பள்ளப்பட்டி போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதனால் கருப்பூர் ரோந்து வாகன எஸ்.ஐ., பழனிசாமி தலைமையில் போலீசார், அங்குள்ள சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு நடுவே, 33 மூட்டைகளில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.425 டன்னில், 'ஹான்ஸ், பான்பராக்' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.இதுகுறித்து வழக்குப்பதிந்த கருப்பூர் போலீசார், லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட, ஓமலுார், தர்மபுரி பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன், 56, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், பெங்களூருவில் இருந்து கரூர், ஈரோட்டுக்கு சரக்கு பரிமாற்றத்தில் ஈடுபடும் தனியார் அலுவலகத்தில் இருந்து புகையிலை பொருட்களை ஏற்றி வந்ததாக தெரிவித்தார். இதனால், 'பார்சல்' நிறுவன உரிமையாளரான, பெங்களூருவை சேர்ந்தவரை, கருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.