/உள்ளூர் செய்திகள்/சேலம்/2,430 டன் பருப்பு, கோதுமை சரக்கு ரயிலில் சேலம் வந்தது2,430 டன் பருப்பு, கோதுமை சரக்கு ரயிலில் சேலம் வந்தது
2,430 டன் பருப்பு, கோதுமை சரக்கு ரயிலில் சேலம் வந்தது
2,430 டன் பருப்பு, கோதுமை சரக்கு ரயிலில் சேலம் வந்தது
2,430 டன் பருப்பு, கோதுமை சரக்கு ரயிலில் சேலம் வந்தது
ADDED : மார் 11, 2025 07:13 AM
சேலம்: மத்திய பிரதேசத்திலிருந்து, நேற்று சரக்கு ரயில் மூலம் சேலத்துக்கு, 2,430 டன் கோதுமை, பருப்பு மற்றும் நெல் மூட்டைகள் வரத்தாகின.
வட மாநிலங்களிலிருந்து சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களுக்கு, பருப்பு, தானியம், சிமென்ட், உரம் உள்ளிட்டவை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. மத்திய பிரதேசத்திலிருந்து, நேற்று சத்திரம் மார்க்கெட் ஸ்டேஷனுக்கு வந்த சரக்கு ரயிலில், 180 டன் கோதுமை, 2,100 டன் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பு, 150 டன் நெல் என மொத்தம் 2,430 டன் தானியங்கள் வரத்தாகின. இவற்றை சுமை துாக்கும் தொழிலாளர்கள், லாரிகளில் ஏற்றி, குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.