/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
ADDED : மே 25, 2025 01:17 AM
சேலம் ;சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், அதன் பொது சுகாதார பிரிவு மூலம் சர்வதேச கருத்தரங்கு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, இரு நாட்கள் நடந்தது. அனைவரையும், பேராசிரியை தமிழ் சுடர் வரவேற்றார். டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார்.
தொடர்ந்து மாலத்தீவை சேர்ந்த, பேராசிரியர் சுல்தான் கலீபா, இங்கிலாந்தை சேர்ந்த தொற்றுநோய் நிபு ணர் ரூபேஷ்குமார், சென்னையின் பாலியல், சுகாதார ஆராய்ச்சி கொள்கை மையத்தலைவர் வெங்கடேசன் சக்கரபாணி, உதவி பேராசிரியர் அலினா சபாஸ்டின், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்
கலையின் தொற்றுநோய், பொது சுகாதாரத்துறை இணை பேராசிரியர்
கல்பனா, சென்னை, இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் சமூக மருத்துவ துறை இணை பேராசிரியர் சுதந்திரக்கண்ணன், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் பேராசிரியர் பிரஹான்குமார், ஈரோடு அச்சுதா லோ விஷன் கிளினிக் தலைவர், கண்ணொளியியல் ஆராய்ச்சி அகாடமி நிறுவனர் கோபிநாத் மாதேஸ்வரன் ஆகியோர், இரு நாட்களாக, பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல், பட விளக்க காட்சி போன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லுாரி பொது சுகாதாரப்பிரிவு உதவி பேராசிரியை பிரியங்கா நன்றி தெரிவித்தார்.