/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் காவிரி ஆற்றில் 1,500 சிலைகள் கரைப்பு மேட்டூர் காவிரி ஆற்றில் 1,500 சிலைகள் கரைப்பு
மேட்டூர் காவிரி ஆற்றில் 1,500 சிலைகள் கரைப்பு
மேட்டூர் காவிரி ஆற்றில் 1,500 சிலைகள் கரைப்பு
மேட்டூர் காவிரி ஆற்றில் 1,500 சிலைகள் கரைப்பு
ADDED : செப் 01, 2025 04:13 AM
மேட்டூர்: விநாயகர் சதுர்த்தி, கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அன்று மாலை முதல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள், சிலை-களை மேட்டூர் கொண்டு வந்து கரைத்தனர்.
குறிப்பாக மேட்டூர் அணை திப்பம்பட்டி; கூணான்டியூர்; சென்-றாய பெருமாள் கோவில் அருகே; எம்.ஜி.ஆர்., பாலம்; பழைய பாலம் அடிவார காவிரி ஆறு என, 5 இடங்களில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதித்தனர்.நேற்று மட்டும், மேட்டூர் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட காவிரி பாலம் பகுதியில், 650, கருமலைக்கூடல் ஸ்டேஷனுக்குட்-பட்ட எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரம், அணை திப்பம்பட்டி நீர்ப-ரப்பு பகுதியில், 30, கொளத்துார் ஸ்டேஷனுக்கு உட்பட்ட சென்-றாய பெருமாள் கோவில் அடிவாரம் அணை நீர்பரப்பு பகுதியில், 2, மேச்சேரி ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கூனாண்டியூர் நீர்ப-ரப்பு பகுதியில், 65 என, ஒரே நாளில், 747 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதேபோல் கடந்த, 5 நாட்களில், 1,500 சிலைகள் கரைக்கப்பட்டன.
அதேபோல் தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்-பட்ட, 35 சிலைகள், ஹிந்து முன்னணி சார்பில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஜங்கம்மசமுத்திரம், சுவேத நதிக்கரை தடுப்பணையில் கரைத்தனர். தாரமங்கலம், மானத்தாள் ஏரியில், சிலைகளை கரைக்க அனுமதி இல்லாத நிலையில், சிலர் அங்-குள்ள ஓடையில் சிறு சிலைகளை
கரைத்தனர்.