/உள்ளூர் செய்திகள்/சேலம்/போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளரை தாக்கி நகையை கொள்ளையடித்து 14 'குடி'மகன்கள் ஓட்டம்போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளரை தாக்கி நகையை கொள்ளையடித்து 14 'குடி'மகன்கள் ஓட்டம்
போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளரை தாக்கி நகையை கொள்ளையடித்து 14 'குடி'மகன்கள் ஓட்டம்
போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளரை தாக்கி நகையை கொள்ளையடித்து 14 'குடி'மகன்கள் ஓட்டம்
போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளரை தாக்கி நகையை கொள்ளையடித்து 14 'குடி'மகன்கள் ஓட்டம்
ADDED : ஜன 06, 2024 07:01 AM
சேலம் : போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, 14 பேர், அதன் பொறுப்பாளரை தாக்கிவிட்டு, பணம், நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
சேலம், அரிசிபாளையம் பிரதான சாலையை சேர்ந்தவர் தீபக், 41. அதே பகுதியில், 'நியூ லைப் ரெக்கவரி பவுன்டேஷன்' பெயரில் குடிபோதை மறுவாழ்வு மையத்தை நடத்துகிறார்.அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த, சேலம், நெத்திமேட்டை சேர்ந்த வீரபாண்டி, 35, பொன்னம்மாபேட்டை சரவணன், 55, கோரிமேடு ராஜகணபதி, 30, மாமாங்கம் சூர்யாஸ்ரீ, 27, மல்லுார் கனகராஜ், 54, இடைப்பாடி வடிவேல், 47, மேட்டூர், பச்சனம்பட்டி செல்லதுரை, 53, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தேர் பேட்டை ஸ்ரீதரன், 41, மஞ்சுநாத், 45, ஈரோடு, சித்தோடு, ராயம்பாளையம்புதுார் தமிழ்செல்வன், 21, திருச்செங்கோடு ராஜூ, 44, பெரம்பலுார் மாவட்டம் கீரனுார் ராம்குமார், 36, மட்டுமின்றி, மையத்தில் பணிபுரிந்த திருச்செங்கோடு ஆனந்த், 31, ராசிபுரம் செல்வராஜூ, 49, ஆகியோர் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தீபக் முகத்தில் மிளகாய் பொடியை துாவினர்.
அவர் நிலை தடுமாறியதும் கயிற்றால் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் இருந்த, இரு மொபைல் போன்கள், 4,000 ரூபாய், 3 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றனர். இதுகுறித்து நேற்று தீபக் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், 14 பேரையும் தேடி வருகின்றனர்.