/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெறி நாய்கள் கடித்து எஸ்.ஐ., - குழந்தை உள்பட 11 பேர் படுகாயம் வெறி நாய்கள் கடித்து எஸ்.ஐ., - குழந்தை உள்பட 11 பேர் படுகாயம்
வெறி நாய்கள் கடித்து எஸ்.ஐ., - குழந்தை உள்பட 11 பேர் படுகாயம்
வெறி நாய்கள் கடித்து எஸ்.ஐ., - குழந்தை உள்பட 11 பேர் படுகாயம்
வெறி நாய்கள் கடித்து எஸ்.ஐ., - குழந்தை உள்பட 11 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 18, 2025 01:32 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, குரும்பர் தெரு, பி.எஸ்.என்.எல்., அலுவலக சாலை, சந்தை சாலை, போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இதில், 3 வெறி நாய்கள், மக்களை விரட்டி வந்தன. இந்நிலையில் நேற்று, தம்மம்பட்டி எஸ்.ஐ., சந்திரன், 59, சஞ்சய், 12, ஆராதனா, 5, வருணவர்ஷினி, 4, தாராஸ்ரீ, 14, தர்ஷினி, 16, செந்தில், 49, கவுரி, 50, விபிஷாஸ்ரீ, 5, தன்விகா, 2, உள்பட, 11 பேரை, வெறி நாய்கள் கடித்துள்ளன. படுகாயம் அடைந்த, 11 பேரும், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.