/உள்ளூர் செய்திகள்/சேலம்/பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்
பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்
பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்
பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிேஷகம்
ADDED : ஜூன் 25, 2024 02:34 AM
வீரபாண்டி: வீரபாண்டி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக மண்டல பூஜையையொட்டி நேற்று, 108 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது.
சேலம் வீரபாண்டியில் செல்வவிநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பண்ணார் மற்றும் சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் கோவில் கட்டி கடந்த, 12ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. 12ம் நாளான நேற்று உலக நன்மை வேண்டி பத்ரகாளியம்மனுக்கு, 108 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது.
இதற்காக நேற்று காலை கோவில் வளாகத்தில், 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, மலர்களால் அலங்கரித்து அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது. அதில் வைத்து பூஜித்த சங்குகளில் இருந்த புனிதநீரால், மூலவர் பத்ரகாளியம்மனுக்கு அபி ேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.