கொலு பொம்மைக்கு 10 சதவீத தள்ளுபடி
கொலு பொம்மைக்கு 10 சதவீத தள்ளுபடி
கொலு பொம்மைக்கு 10 சதவீத தள்ளுபடி
ADDED : செப் 04, 2025 01:46 AM
சேலம், நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு, சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மைகள் கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் அக்., 4ல் முடிகிறது.
இதுகுறித்து பூம்புகார் மேலாளர் நரேந்திரபோஸ் கூறியதாவது:
கொலு பொம்மை கண்காட்சியில் அனைத்து வகை கொலு பொம்மைகளும் உள்ளன. குழுவாகவும், தனித்தனியாகவும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கும்படி கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. புது வரவாக ஐயப்பன் பூஜை செட், உபநயனம், பிரகலாதன், ராதை செட் பொம்மைகள், பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் முதல் கல்யாண வரவேற்பு, வளைகாப்பு, தொட்டில் குழந்தை, காது குத்துதல், சாப்பாடு பந்தி உள்ளிட்ட விசேஷ செட்கள் உள்ளன. 15 முதல், 12,000 ரூபாய் வரை, கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.