/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., நிர்வாகியிடம் 1 பவுன் செயின் பறிப்புஅ.தி.மு.க., நிர்வாகியிடம் 1 பவுன் செயின் பறிப்பு
அ.தி.மு.க., நிர்வாகியிடம் 1 பவுன் செயின் பறிப்பு
அ.தி.மு.க., நிர்வாகியிடம் 1 பவுன் செயின் பறிப்பு
அ.தி.மு.க., நிர்வாகியிடம் 1 பவுன் செயின் பறிப்பு
ADDED : ஜூலை 09, 2024 06:21 AM
சேலம் : சேலம் கருங்கல்பட்டி, வடக்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர், 45. பில்டிங் கான்ட்ராக்டரான இவர், சேலம் மாநகர் அ.தி.மு.க., ஐ.டி.,விங் இணை செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை, 5:00 மணியளவில் வீட்டுக்கு முன்பாக நின்றிருந்தார். அப்போது இரு பைக்கில் வந்த இரண்டு பேர், போதையில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர், கவுரிசங்கர் வசம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்தபடி, திடீரென அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துள்ளார்.
சுதாரித்து கொண்ட அவர், செயினை பத்திரமாக பிடித்து கொண்டுள்ளார். எனினும் விடாப்பிடியாக போதை வாலிபர், வலுவாக இழுத்தில் கையில் சிக்கி அறுந்த செயினுடன் இருவரும் தப்பிவிட்டனர். இதுபற்றி கவுரிசங்கர், செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரில், கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினில், ஒன்றரை பவுன் செயின் கைக்குள் பிடிபட, ஒரு பவுன் செயினை, பறித்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்பகுதி, சிசிடிவி கேமரா பதிவை வைத்து பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.