/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் மாவட்டத்தில் 1 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம் சேலம் மாவட்டத்தில் 1 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் 1 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் 1 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் 1 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம்
ADDED : செப் 12, 2025 01:39 AM
சேலம்,
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், இதுவரை சேலம் மாவட்டத்தில் மட்டும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை, 15ல் இருந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கப்பட்டு, நவம்பர் வரை 432 குறைதீர் முகாம்கள் நடக்கவுள்ளன. இதில், அனைத்து அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் தீர்வு காணும் வகையில் திட்டம் செயல்படுத்தி வருகின்றனர்.
ஜூலை 15 முதல் செப்.,10 வரை நடத்தப்பட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து, 90,439 மனுக்களும், 1 லட்சத்து, 1,726 பெண்களிடம் இருந்து மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி 51வது வார்டுக்குட்பட்ட மக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேரு கலையரங்கில் நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை பார்வையிட்டு பெறப்பட்ட மனுக்களில், 17 பேருக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் ஆணைகளையும், 15 பேருக்கு சொத்து வரி பெயர் மாற்ற உத்தரவுகளையும் வழங்கினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், மண்டல தலைவர் அசோகன், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.