/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 30, 2024 02:54 AM
சேலம்: சேலம், செவ்வாப்பேட்டை பகுதியில், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கோவையை சேர்ந்த செல்வராஜ் உட்பட, 11 பேரை சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரு-கின்றனர்.இந்நிலையில், சேலம் வின்சென்ட் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்-தேகப்படும்படி, நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அவ-ரிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் வலிக்காக பயன்படுத்தும், 10 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது, அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, தளவாய்பட்டியை சேர்ந்த சதீஷ், 21, என்பதும், குரங்குசாவடியை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் இவருக்கு மாத்திரைகளை கொடுத்ததும் தெரிய வந்தது, இதைய-டுத்து சதீஷை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.