/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்' பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'
பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'
பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'
பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'
ADDED : ஜூன் 21, 2024 02:34 AM
தலைவாசல்:சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. அந்த சாராயத்தை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார் மாவட்ட பகுதிகளில், வியாபாரிகள் மூலம் விற்கப்படுகின்றன.
அந்த வியாபாரிகள், நெருங்கிய வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு சாராயம் விற்பது தொடர்ந்து வருகிறது.
அதன்படி, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானில் பைக்கில் கள்ளச்சாராயம் பாக்கெட் கொண்ட மூட்டையை வைத்து, 'டோர் டெலிவரி' முறையில் வாடிக்கையாளர்களை தேடிச்சென்று விற்கும் வீடியோ, வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.
தற்போது கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தலைவாசலில் சாராயம் விற்கம் வீடியோ பரவுவது, போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பழைய வீடியோவை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்' என்றனர்.