/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அணைமேடு மேம்பாலம் விரைந்து திறக்க வலியுறுத்தல் அணைமேடு மேம்பாலம் விரைந்து திறக்க வலியுறுத்தல்
அணைமேடு மேம்பாலம் விரைந்து திறக்க வலியுறுத்தல்
அணைமேடு மேம்பாலம் விரைந்து திறக்க வலியுறுத்தல்
அணைமேடு மேம்பாலம் விரைந்து திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 14, 2024 01:57 AM
சேலம், சேலம், மரவனேரி அருகே அணைமேட்டில், சேலம் - விருதாசலம் ரயில் வழித்தடம் செல்கிறது. அதில் தினமும் பல்வேறு ரயில்கள் செல்வதால், அடிக்கடி கேட் போடப்பட்டு ஒவ்வொரு முறையும், 20 நிமிடத்துக்கு மேல் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க, மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்தது.
அதன்படி அணைமேட்டில் இருந்து, டி.எம்.எஸ்., ெஷட் வரை மேம்பால கட்டுமானப்பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இறுதிக்கட்ட பணி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழியே செல்லும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அலுவலகம் செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள், பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தினர்.
இதுகுறித்து சேலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அணைமேட்டில் ரயில்வே மேம்பால பணி கட்ட, 2016ல் திட்டமிடப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானதால், 2021ல் தான் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. ரயில்வே வேலை திட்டத்தில், 92.40 கோடி ரூபாய் மதிப்பில், 900 மீ., நீளத்தில், 11 மீ., சாலை அகலத்தில், 23 துாண்களுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. 95 சதவீத பணி நிறைவடைந்து, மின்விளக்கு அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்த பின், சாலை பாதுகாப்பு அலகு குழுவினர் தணிக்கை செய்வர். பின் மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.