/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெங்களூருவை சேர்ந்த திருடர்கள் கைது 21 பவுன் நகைகள் மீட்பு; கார் பறிமுதல் பெங்களூருவை சேர்ந்த திருடர்கள் கைது 21 பவுன் நகைகள் மீட்பு; கார் பறிமுதல்
பெங்களூருவை சேர்ந்த திருடர்கள் கைது 21 பவுன் நகைகள் மீட்பு; கார் பறிமுதல்
பெங்களூருவை சேர்ந்த திருடர்கள் கைது 21 பவுன் நகைகள் மீட்பு; கார் பறிமுதல்
பெங்களூருவை சேர்ந்த திருடர்கள் கைது 21 பவுன் நகைகள் மீட்பு; கார் பறிமுதல்
ADDED : ஜூன் 17, 2024 12:59 AM
ஆத்துார்: ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்த ஜோதிடர் கிருஷ்ணமோகன், 43. இவரது வீட்டில், கடந்த, 7ல், 23 பவுன், 3.50 லட்சம் ரூபாய் திருடுபோனது. அதேபோல் நரசிங்கபுரம், பழைய வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி ஸ்வர்ணலதா, 48. பல் மருத்துவரான இவர், கடந்த, 5ல், சென்னை சென்ற நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது, ஒரு பவுன், வெள்ளி கொலுசு திருடுபோனது தெரிந்தது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.
அதில் பெங்களூரு, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத், 34, லோகேஷ், 36, இத்திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர்களை பிடித்து விசாரித்தபோது, நரசிங்கபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்த, நகராட்சி அலுவலர் நாகராஜ் வீட்டில், 2023 அக்டோபரில், 38 பவுன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம், 21 பவுன், அரை கிலோ வெள்ளி, கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஆல்டோ' காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மஞ்சுநாத், லோகே ைஷ, நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பெங்களூருவை சேர்ந்த இருவரும் காரில் வந்து, ஆத்துார் டவுன் பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. ஜோதிடர் வீட்டில், 23 பவுன் திருடியதில் அரை பவுன் மட்டும் ஒரிஜினல் என்பதும் மற்றவை கவரிங் என தெரியவர, அவற்றை நரசிங்கபுரம் பிரிவு சாலை முட்புதரில் வீசிச்சென்றுள்ளனர். பல் மருத்துவர் மற்றும் ஓராண்டுக்கு முன், நகராட்சி அலுவலர் வீட்டிலும் நகை, வெள்ளி பொருட்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர்' என்றனர்.