நள்ளிரவில் கோவில் உண்டியல் திருட்டு
நள்ளிரவில் கோவில் உண்டியல் திருட்டு
நள்ளிரவில் கோவில் உண்டியல் திருட்டு
ADDED : ஜூன் 19, 2024 01:56 AM
காரிப்பட்டி, காரிப்பட்டி அருகே, கோவில் உண்டியலை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரிப்பட்டி அடுத்த, சின்னகவுண்டாபுரம் பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே, கும்பத்து மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா கடந்த, 29ல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவில் உண்டியலை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
காரிப்பட்டி போலீசார் கோவிலுக்கு சென்று, தடயங்களை கைப்பற்றி, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சியை சோதனை செய்து, கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.