/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு
சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு
சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு
சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 04:13 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,616 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம், சேலம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில், 17 அமர்வுகளில் நடந்தது. இதில், 4,541 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், சேலம் பள்ளப்பட்டி, மேம்பாலம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு, 47, திருமணமாகி நான்கு மகன்கள் உள்ளனர்.
லாரி டிரைவரான இவர் கடந்த, 2021, ஜூன் 25ல், பெங்களூரு அருகில் உள்ள
சித்ரதுர்கா பகுதியில், சாலையை கடக்கும் போது, கார் மோதி உயிரிழந்தார். இவ்வழக்கில் இழப்பீடாக நேற்று, 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட நீதிபதி சுமதி, அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி, 55, இவர் கடந்த 2023, நவ.,13 ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு, 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக நேற்று வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம், 3,616 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 30 கோடியே, 18 லட்சத்து, 56 ஆயிரத்து, 570 ரூபாய் தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டன.