Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

ADDED : ஆக 03, 2024 01:26 AM


Google News


ஓமலுார்,சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதனால் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வின், சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பொறியியல் கல்லுாரியில், அரங்க கட்டட வரைபடங்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ''18 ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள விளையாட்டு அரங்கம், மக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்படுகிறது. அதில் வாலிபால், ஸ்கேட்டிங், டென்னிஸ், கோ - கோ, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, ஹாக்கி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு திடல்கள் அமைய உள்ளன,'' என்றார்.

மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us