புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல்
புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல்
புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல்
ADDED : ஜூன் 10, 2024 01:55 AM
சேலம்: விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கண் ஒளியியல் பிரிவு மூலம் தேசிய கருத்தரங்கு, புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல் நிகழ்வு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி கல்லுாரி அரங்கில் நடந்தது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.
சென்னை புதுமை கண்டுபிடிப்பு மைய நிறுவனர் மகேஷ்வரி ஸ்ரீனிவாசன், 'நியூராசிம்' நிறுவனர் ரமேஷ், ரெமிடோ நிறுவன, மூத்த கண் ஒளியியல் பிரிவு நிபுணர் விக்னேஷ், சேலம் ட்ரூ லைன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜ் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் பேசினர். பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிற்நுட்பவியலாளர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்களுக்கு புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை, துறையின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர், பேராசிரியை வெண்ணிலா, உதவி பேராசிரியர்கள் பானு, சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத் மற்றும் திவ்யா செய்திருந்தனர்.