/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்
ADDED : ஜூன் 19, 2024 02:36 AM
ஆரணி, ஆரணி அருகே ஆக்கிரமிப்பால் சாலை குறுகியதால், அவ்வழியாக சென்ற பள்ளி வேன் கவிழ்ந்ததில், 10 மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட் டம், ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிப்பள்ளி உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாதததால், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், வேன் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு, கொட்டாமேடு கிராமம் அருகே, சாலை ஆக்கிரமிப்பால் குறுகிய சாலையில் சென்ற வேன், வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் வேனிலிருந்த மாணவர்களை மீட்டனர். இதில், 10 மாணவ, மாணவியர் லேசான காயத்துடன் தப்பினர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.