ADDED : ஜூன் 16, 2024 06:49 AM
வீரபாண்டி : ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் ஊழியர்கள், மக்களுக்கு, தென்மேற்கு பருவமழையை பாதுகாப்பாக எதிர்கொள்வது, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஆட்டையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், செயல்முறை விளக்கம் அளித்தனர்.
குழந்தைகள், சிறுவர்களை நீர்நிலைகளில் தனியே விளையாடுவதையோ, நீச்சல் பழகவோ அனுமதிக்க வேண்டாம். தவறி மூழ்கினால் அங்குள்ள பொருட்களால் மீட்பது குறித்து விளக்கம் அளித்தனர். செயல் அலுவலர் குணாளன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.