/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 07, 2024 02:11 AM
ஓமலுார்;ஓமலுார், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே, வெப்பமின்றி குளிர்ந்த காற்று வீசியது. மாலை, 5:00 மணிக்கு சாரல் மழையாக பெய்யத்
தொடங்கியது.
தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இரவு, 7:00 மணிக்கு ஓமலுார் அரசு மருத்துவனை பிரேத பரிசோதனை கூடம் அருகே, சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஓமலுார் - மேட்டூர் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார், மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அதேபோல் தலைவாசல், வீரகனுார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணிக்கு இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. 2 மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, பரவலாக மழை பெய்தது. வாழப்பாடியில் மாலை, 6:30 மணிக்கு கருமேகம் சூழ்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.