/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 16, 2024 05:34 AM
தாரமங்கலம் : பெங்களூரு அங்க காருண்யா டிரஸ்ட், மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்து, தாரமங்கலம், அத்திக்கட்டானுார் சமுதாய கூடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவை நேற்று நடத்தினர்.
சங்க செயலர் சங்கர் வரவேற்றார். தாரமங்கலம் நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர சைக்கிள், செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டிரஸ்ட் மேலாளர் சுரேஷ், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பழனிசாமி உள்பட பலர்
பங்கேற்றனர்.