/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வக்கீல் வீட்டில் பணம், ஆவணம் திருடிய சகோதரர்களுக்கு காப்பு வக்கீல் வீட்டில் பணம், ஆவணம் திருடிய சகோதரர்களுக்கு காப்பு
வக்கீல் வீட்டில் பணம், ஆவணம் திருடிய சகோதரர்களுக்கு காப்பு
வக்கீல் வீட்டில் பணம், ஆவணம் திருடிய சகோதரர்களுக்கு காப்பு
வக்கீல் வீட்டில் பணம், ஆவணம் திருடிய சகோதரர்களுக்கு காப்பு
ADDED : ஜூலை 30, 2024 02:47 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே, முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 49 வக்கீலான இவர், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சக்திவேல். 49, ராஜ்குமார், 45, இவர்களின் குடும்ப சொத்தான அபர்ணா தியேட்டர் நிலத்தின் ஒரு பகுதியை, 2022ல் வாங்க முன்பணம் கொடுத்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலத்தை, மொத்த பணம் கொடுத்து கிரயம் செய்யாத நிலையில், ஓராண்டுக்கும் மேலாக சகோதரர்கள் இருவரும் அடிக்கடி பன்னீர்செல்வம் வீட்-டுக்கு வந்து சென்றுள்ளனர். கடந்தாண்டு ஜூலை சகோதரர்கள் இருவரும் இவரது வீட்டில் இருந்த, 10 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நில ஆவணங்கள், இவரது மற்றும் இவரின் மனைவியின் காசோலைகள் மற்றும் வழக்கு ஆவணங்களை திருடி சென்றுள்ளனர்.இது குறித்து, அப்போதே வக்கீல் பன்னீர்செல்வம் ஆட்டையாம்-பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் இரு தரப்-பிலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் பேச்சு வார்த்தை மூலம் சரி செய்து கொள்வதாக தெரிவித்தனர். ஓராண்டாக பல கட்டங்களில் நடந்த பேச்சு முடிவுக்கு வராத நிலையில், சக்திவேல் தலைமறைவாகி விட்டார். பன்னீர்செல்-வத்தின் புகார்படி, நேற்று ஆட்டையாம்பட்டியில் இருந்த சகோத-ரர்கள் சக்திவேல், ராஜ்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.