Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கார் மோதிய விபத்தில் தனியார் ஊழியர் பலி;2 பேர் படுகாயம்

கார் மோதிய விபத்தில் தனியார் ஊழியர் பலி;2 பேர் படுகாயம்

கார் மோதிய விபத்தில் தனியார் ஊழியர் பலி;2 பேர் படுகாயம்

கார் மோதிய விபத்தில் தனியார் ஊழியர் பலி;2 பேர் படுகாயம்

ADDED : ஜூலை 18, 2024 02:09 AM


Google News
சேலம்: மல்லுார் அடுத்த வாணியம்பாடி, ஏர்வாடி பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் பிரகாசம், 40. இவர், அரியானுாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கணினி பிரிவில் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை, 4:30 மணியளவில் ேஹாண்டா யுனிகான் பைக்கில், பூலாவரியில் இருந்து, மெயின்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பிரிமியர் கார் மோதி-யதில், பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிர-காசம் அதே இடத்தில் இறந்தார். இந்த விபத்தில் கார் கவிழ்ந்து, அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

கொண்டலாம்பட்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த-வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us