Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்சாரம் இல்லாமல் 40 ஆண்டாக தவிப்பு விண்ணப்பத்தை வாங்க மறுத்த மின்வாரியம்

மின்சாரம் இல்லாமல் 40 ஆண்டாக தவிப்பு விண்ணப்பத்தை வாங்க மறுத்த மின்வாரியம்

மின்சாரம் இல்லாமல் 40 ஆண்டாக தவிப்பு விண்ணப்பத்தை வாங்க மறுத்த மின்வாரியம்

மின்சாரம் இல்லாமல் 40 ஆண்டாக தவிப்பு விண்ணப்பத்தை வாங்க மறுத்த மின்வாரியம்

ADDED : ஜூலை 30, 2024 02:47 AM


Google News
பனமரத்துப்பட்டி: மின்சாரம் இல்லாமல், 40 ஆண்டுகளாக கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள நாழிக்-கல்பட்டி மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், பொய்மான் கரடு உள்ளது. அங்கு, நாழிக்கல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒண்டியூர் சாலையோரத்தில் ஏராளமான ஏழை மக்கள் வீடுகள் கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியி-ருந்து வருகின்றனர். ஊராட்சி சார்பில், வீட்டு வரி வசூலிக்கப்-பட்டு வருகிறது. அந்த வீடுகளுக்கு இது நாள் வரை, மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது. அதில், மின் இணைப்பு வழங்க கோரி, மக்கள் மனு அளித்தனர். ஆனால், பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவ-லர்கள், விண்ணப்பத்தை வாங்க மறுத்தனர். இது குறித்து, முகாமை துவக்கி வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., துணை செயலரும், ஒன்றிய கவுன்சிலருமான சுரேஷ்குமாரிடம், பொதுமக்கள் தெரிவித்தனர்.

கவுன்சிலர் சுரேஷ்குமார், ''முகாமில், பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை வாங்க மறுக்க கூடாது. விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, அதற்குரிய பதில் அளிக்க வேண்டும். மின்-சாரம் இல்லாமல், குழந்தைகளின் படிப்பு பாதிக்கிறது. மக்க-ளுக்கு மின் இணைப்பு கிடைக்க உதவ வேண்டும்,'' என, பனம-ரத்துப்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் சாந்தியிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின், பொதுமக்களிடம் இருந்து விண்ணப்-பத்தை, மின்வாரிய அதிகாரிகள் பெற்று கொண்டனர்.உதவி பொறியாளர் சாந்தி கூறுகையில்,'' புறம்போக்கு நிலத்தில் வீடுகள் உள்ளது. தாசில்தாரிடம் சான்று வாங்கி, விண்ணப்பத்-துடன் தர வேண்டும்,'' என்றார்.சேலம் தாசில்தார் தாமோதரன் கூறுகையில்,'' பொய்மான் கரடு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்-குள்ள ஆக்கிரமிப்பு சம்மந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்-ளது. தடையில்லா சான்று வழங்க இயலாது,'' என்றார்.பொதுமக்கள் கூறுகையில்,' இங்கு, மூன்று தலைமுறைகளாக குடியிருக்கிறோம். மின்சாரம் இல்லாததால், பாம்பு தொல்லை அதிகம் உள்ளது. குழந்தைகளுடன் இருட்டில் தவிக்கிறோம். மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us