/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோழி பண்ணையால் 'ஈ'க்கள் தொல்லை மா.கம்யூ., - மக்கள் இணைந்து தர்ணா கோழி பண்ணையால் 'ஈ'க்கள் தொல்லை மா.கம்யூ., - மக்கள் இணைந்து தர்ணா
கோழி பண்ணையால் 'ஈ'க்கள் தொல்லை மா.கம்யூ., - மக்கள் இணைந்து தர்ணா
கோழி பண்ணையால் 'ஈ'க்கள் தொல்லை மா.கம்யூ., - மக்கள் இணைந்து தர்ணா
கோழி பண்ணையால் 'ஈ'க்கள் தொல்லை மா.கம்யூ., - மக்கள் இணைந்து தர்ணா
ADDED : ஜூலை 12, 2024 08:38 PM
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் நவசக்தி, 36. அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில், 50,000 முட்டை கோழிகளை வளர்க்கிறார். அங்கிருந்து வரும் ஈக்கள், அருகே உள்ள வீடுகளில் சமையல் பாத்திரங்கள், உணவுகளை மொய்க்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சேலம் கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., - சுகாதாரம், கால்நடைத்துறைக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.
இந்நிலையில் நேற்று, மா.கம்யூ., கட்சியின் ஆத்துார் தாலுகா செயலர் முருகேசன் தலைமையில் மக்கள், வேப்பிலையில், 'ஈ'க்களை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தென்னங்குடிபாளையத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆத்துார் சுகாதார துணை இயக்குனர் யோகானந்த் பேச்சு நடத்தினார். அப்போது, 'புகாருக்கு, 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க, கோழிப்பண்ணை உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. விளக்கம் பெறப்பட்ட பின், பூச்சியியல் துறை உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து ஈக்கள் தொல்லை அதிகம் இருந்தால் கலெக்டருக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.